RSS

Wednesday, August 18, 2010

என் கனவுகளில்!

தேவனைப் போல்
திடீரென 
என் முன் வந்தாய்!
அந்த கணம்-
உ(ன்)னைத் தவிர
உலகமே சூன்யமாய்ப் போனதோர்
உணர்வு!
நீ யாரென வியந்திருக்கையிலேயே
சடுதியில் மறைந்தும் போனாய் - என்
கனவுகளில்!

Tuesday, August 17, 2010

என்ன ஆச்சரியம் இருக்கிறது?!

            நீ துயில் கொள்ளும் அழகைக் காண

                நான் தான் ஆசைப்படுகிறேன் என்றால்
                நிலவும் உன் வீட்டு ஜன்னல் வழியே
                எட்டிப்பார்க்க ஆசைப்படுகிறதாம்!
                நட்சத்திரங்கள் கண் சிமிட்டிப்
                பேசிக்கொள்கின்றன...


                நீ காலையில் சோம்பல் முறிக்கும் அழகைக் காண
                தினம் உன் வீட்டெதிரில்
                நான் தவமிருக்கிறேன் என்றால்-
                சூரியனும் உன் வீட்டு வாசலில்
                தவம் கிடக்கிறதாம்!
                உன் வீட்டுக்கதவுகள் ரகசியமாய்
                பேசிக்கொள்கின்றன...


               நீ தினம் தலையில் சூடும் ரோஜா
               எனதாகத்தான் இருக்க வேண்டும் என
               நான் நினைத்தால்-
               உன் வீட்டுத் தோட்டத்தில் 
               சண்டை நடக்கிறதாமே?! - நீ 
               எதை முதலில் பறிப்பாய் என்று...


               நீ பேசும் அழகில் 
               சங்கீதம் கூட சற்று தடுமாறித் தான் போகிறது...
               நானோ பேச்சற்றுப் போனேன்!


               உன் செல்லச் சிணுங்கல்களில்
               கால் கொலுசின் ஓசை கூட தோற்றுத் தான் போகிறது...
               நான் உன்னிடம் தோற்றுப் போனதில் 
               என்ன ஆச்சரியம் இருக்கிறது?!

நம்பிக்கை

               கடற்கரையில் சற்று தொலைவில் அமர்ந்திருக்கிறாய்...
               உனது பாதங்களை 
               தழுவிச் செல்ல வரும் அலைகள்
               உனது காலடிச் 
              சுவடுகளை அள்ளிச் சென்ற திருப்தியில்
              திரும்பிக் கொண்டிருக்கின்றன


              பெண்ணே,
              நான் மட்டும் தினம் வந்து போகிறேன்,
              ஒரு நாள், 
              நீ என்னை நிச்சயம் திரும்பிப் பார்ப்பாய் என்ற
              நம்பிக்கையில்.

Monday, August 16, 2010

என்ன விந்தை?!

                உணவில்லாது கூட வாழ்ந்து விடுவேன் போலும் -
                உன் நினைவுகள் இன்றி ஒரு நொடி கூட 
                நகர மாட்டேன் என்கிறது…


                என் உலகமே நீதான் என்றான பின்பு 
                என் நினைவுகள் உனைச் சுற்றி வருவதில்
                என்ன விந்தை இருக்கிறது?!

Sunday, August 15, 2010

தவம்

                ஓராயிரம் பேரில் 
                உன்னை மட்டும் - என் 
                கண்கள் முதலில் கண்டு விடுகிறது…
                உனைப் பார்ப்பதற்கென்றே 
                தவமிருக்கின்றன போலும்…
                என்னைப் போல.

ஒருவேளை

                ஒருவேளை 
                நீ என் கண்ணில் படாதிருந்தால்
                ஒவ்வொரு நாளும் என்னுடையதாய்
                நான் வாழ்ந்திருப்பேன்..


                இன்றோ
                ஒவ்வொரு நொடியும் 
                சரியென்று ஏற்கவும் முடியாமல்
                தவறென்று தவிர்க்கவும் முடியாமல்
                எப்போதும் உன் நினைவுகளோடு…

தொலைந்து போவேன்..

                உன் பெயர் உச்சரிக்கப்பட்டாலே
                நான் எனை மறந்து போகிறேன்…
                நிச்சயம்!
                நீ என் அருகில் இருந்தால்
                என்னுள்ளேயே நான் தொலைந்து போவேன்.

புதியதோர் ரசனை..


பலமுறை உன்னைப் பார்த்திருக்கிறேன் - இருப்பினும்
ஒவ்வொரு முறையும் உன்னைப் புதிதாய் ரசிக்கிறேன்
உண்மை தான்!
காதலில் கண்கள் கூட - உனைக்
கண்டால் இமைக்க மறந்து விடுகிறது.

சுதந்திரப் பரவசம்






           ஏதோவொரு பரவசம்
           என்னை உன்னிடம் அழைத்து வந்தது!

           எப்போதோ சிறுவயதில் பாடிய கொடிப்பாடல்
           "பட்டொளி வீசி பறக்குது பாரீர்..."
           உனைக் கண்டதும் – எனையரியாது
           தானாகவே முணு முணுத்தேன்!

           உன் கம்பீரத் தோற்றம் கண்டு
           கோழைகளும் வீரர்களாவர்-
           உனக்காக என்றால்
           இந்த சிற்றுயிரும்
           தியாகியாய் மாறும்!

           மௌனமாய் நீ தவழும் அழகைக் கண்டு
           இயற்கையும் உன் தாள் வணங்கும் - ஏனைய 
           இதயங்களும் வந்தனம் செய்யும்…
           வந்தே மாதரம்.

Saturday, August 14, 2010

Fear of Life!



Fear of friends!
Friends may leave us apart, (In Search of new friends!) – Then
Those pains would be hurting till the end…

Fear of Love!
Love may not become a success, (At all times!) – Then
Those hurts would swallow me day by day…

Fear of crowd!
People may take us through, (somehow we are lost!) – Then
That loneliness would make me longing for ever…

Fear of competition!
Even, relations may be competing, (To reach the top) – Then
Those controversies would be painful now and then…

Fear of self!
        Those changing minds,
        Those moving machines,
        Those dreary relations,
        Those lonely sicknesses,
        Those lively dreams, et. al.
- May change me one day…
On that day, I may not be able to realize me!
And thy, the world!
Fear of life! (Above all)
Oh! God, you have given this life to me…
You have given these
Sorrows and pains,
Loves and hurts,
Sick and loneliness too, along with…
It’s a fact - that
There is something hidden in everyone…
But, bring out that some “thing” in me – so that
The life smiles at me - Saying hi.

Dedicated To Mom

Though you smile all the time,
I knew there is a hidden sorrow in your mind…

There is nothing I can give in return,
For your day to day sacrifices…

There is nothing I can give in return,
Than my love and peace-
In the rest of days to come.
         -To my Sweet Mom

Dedicated To Dad

There were days I liked you much;
I loved you more than anyone else!

There were days when I cried;
Longing for you and your hands around me!

There were days when I scolded you worse – but
Secretly in mind!

There were days when we quarreled against – And
Passed a few days without a word!

There were days when you showed your ego – And
I too did the same in return!

At times,
I would get silly curses from you!
Though it all happened,
Still going on…
But,
Our love is the reality that lasts forever,
Which overcomes our
Silly fights and funny cold wars!
             - Dedicated to my dad :-)