RSS

Wednesday, August 18, 2010

என் கனவுகளில்!

தேவனைப் போல்
திடீரென 
என் முன் வந்தாய்!
அந்த கணம்-
உ(ன்)னைத் தவிர
உலகமே சூன்யமாய்ப் போனதோர்
உணர்வு!
நீ யாரென வியந்திருக்கையிலேயே
சடுதியில் மறைந்தும் போனாய் - என்
கனவுகளில்!

Tuesday, August 17, 2010

என்ன ஆச்சரியம் இருக்கிறது?!

            நீ துயில் கொள்ளும் அழகைக் காண

                நான் தான் ஆசைப்படுகிறேன் என்றால்
                நிலவும் உன் வீட்டு ஜன்னல் வழியே
                எட்டிப்பார்க்க ஆசைப்படுகிறதாம்!
                நட்சத்திரங்கள் கண் சிமிட்டிப்
                பேசிக்கொள்கின்றன...


                நீ காலையில் சோம்பல் முறிக்கும் அழகைக் காண
                தினம் உன் வீட்டெதிரில்
                நான் தவமிருக்கிறேன் என்றால்-
                சூரியனும் உன் வீட்டு வாசலில்
                தவம் கிடக்கிறதாம்!
                உன் வீட்டுக்கதவுகள் ரகசியமாய்
                பேசிக்கொள்கின்றன...


               நீ தினம் தலையில் சூடும் ரோஜா
               எனதாகத்தான் இருக்க வேண்டும் என
               நான் நினைத்தால்-
               உன் வீட்டுத் தோட்டத்தில் 
               சண்டை நடக்கிறதாமே?! - நீ 
               எதை முதலில் பறிப்பாய் என்று...


               நீ பேசும் அழகில் 
               சங்கீதம் கூட சற்று தடுமாறித் தான் போகிறது...
               நானோ பேச்சற்றுப் போனேன்!


               உன் செல்லச் சிணுங்கல்களில்
               கால் கொலுசின் ஓசை கூட தோற்றுத் தான் போகிறது...
               நான் உன்னிடம் தோற்றுப் போனதில் 
               என்ன ஆச்சரியம் இருக்கிறது?!

நம்பிக்கை

               கடற்கரையில் சற்று தொலைவில் அமர்ந்திருக்கிறாய்...
               உனது பாதங்களை 
               தழுவிச் செல்ல வரும் அலைகள்
               உனது காலடிச் 
              சுவடுகளை அள்ளிச் சென்ற திருப்தியில்
              திரும்பிக் கொண்டிருக்கின்றன


              பெண்ணே,
              நான் மட்டும் தினம் வந்து போகிறேன்,
              ஒரு நாள், 
              நீ என்னை நிச்சயம் திரும்பிப் பார்ப்பாய் என்ற
              நம்பிக்கையில்.

Monday, August 16, 2010

என்ன விந்தை?!

                உணவில்லாது கூட வாழ்ந்து விடுவேன் போலும் -
                உன் நினைவுகள் இன்றி ஒரு நொடி கூட 
                நகர மாட்டேன் என்கிறது…


                என் உலகமே நீதான் என்றான பின்பு 
                என் நினைவுகள் உனைச் சுற்றி வருவதில்
                என்ன விந்தை இருக்கிறது?!

Sunday, August 15, 2010

தவம்

                ஓராயிரம் பேரில் 
                உன்னை மட்டும் - என் 
                கண்கள் முதலில் கண்டு விடுகிறது…
                உனைப் பார்ப்பதற்கென்றே 
                தவமிருக்கின்றன போலும்…
                என்னைப் போல.